எல்லா புகழுக்கும் உரியோனே அல்லாஹ்
எமக்கருள் புரிந்திடு ரஹ்மான்.
நல்லறிவாளராய் நாம் கற்று உயர
நல்லருள் புரிந்திடுவாயே.
அருள்வாய் அருள்வாய் அருள்வாய்
(எல்லா புகழுக்கும்)
நிந்தவூர் மாதர்கள் நிலை தனை உயர்த்திட
நேர் பணி புரிந்திடும் தாயே
சிந்தை மகிழ்ந்தே எம்
சீரிய சேவைகள்
சிறப்பினை பெருக்கிடுவோமே
நல்லாசான் பலரை நீ பெற்று
நமக்கறிவூட்டிடும் மாதா
வல்லோனை போற்றுகின்றோமே!
வளர்க வளர்க வளர்க
(எல்லா புகழுக்கும்)
அஞ்ஞானம் அகற்றி நீ மெய்ஞ்ஞானம் பரப்பியே
விஞ்ஞான யுகத்தை நீ அடைந்தாய்.
என்றென்றும் பல்துறை மேதைகள் தோன்றிடும்
ஈடற்ற நிலை கடன் ஆனாய்
செஞ்சோற்றுக்கடன் தனை இறுக்கும்
சீரிய பணிபுரிந்துணையே
நெஞ்சார வாழ்த்துகின்றோமே
வாழ்க வாழ்க வாழ்க
(எல்லா புகழுக்கும்)
அல் மஸ்ஹர் பெண்கள் தேசிய கல்லூரி
அல்லாஹ்வின் அருளினால் ஓங்க
ஆசான்கள் அதிபர்கள் அருந்தொண்டும் புரிவோர்கள்
அனைவரும் நீடுழி வாழ்க
ஜெஹமெங்கும் நின் புகழ் பரவ
ஜெயம் பெற்று நின் புகழ் ஜொலிக்க
அல்லாஹ்வே அருள் புரிவாயே
ஆமீன் ஆமீன் ஆமீன்
(எல்லா புகழுக்கும்)








